tamil - seru kathai - kaalam karainthalum

"அன்புள்ள அப்பா" என்று ராகமாய் இழுத்தபடி உள்ளிருந்து மெதுவாய் ஓடி வந்து அருகில் அமர்ந்த அன்பு மகள் சுசியை பார்த்து புன்னகைத்தார் சந்திரசேகர்."என்னடா? இன்னைக்கு ஆட்டமும் பாட்டமுமா ரொம்ப குஷியா இருக்க போல?" என்றபடி கையிலிருந்த பேப்பரை மூடி டீப்பாய் மீது வைத்து விட்டு பதிலுக்காக அவள் முகம் பார்த்தார்."உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா?" என்று அவள் மறுபடியும் பாடினாள்.ஹ்ம்ம்ம் என்ற ஒரு பெருமூச்சோடு புன்னகையை மட்டுமே அவர் பதிலாய் தந்து விட்டு எழ முயல அவள் கையைப் பற்றி"ப்ளீஸ் டாடி! இன்னைக்கு சொல்லியே ஆகணும். எத்தனை நாளா கேட்டுட்டே இருக்கேன்? நீங்க மம்மிய லவ் பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?""இல்லைடா""இப்போ சொல்ல போறீங்களா இல்லையா? அப்போ நானும் நீங்களும் அப்பா பொண்ணு இல்ல ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்னு சொன்னதெல்லாம் பொய்தான?" என்று அவள் சிணுங்கவும் அவர் செய்வதறியாது திகைத்தார்."சரி உனக்கு சொல்றேன். ஆனா சாப்பிட்டதுக்கு அப்புறம்தான்" என்று அவர்போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டு ஆர்வத்தில் வேக வேகமாய் சாப்பிட்டு முடித்தாள்."சொல்லுங்க அம்மாவ எப்படி லவ் பண்ணினிங்க?" என்று அவள் ஆர்வத்துடன் கேட்க"ஹ்ம்ம்ம்.... உங்க அம்மாவ நான் பாக்கறதுக்கு முன்னாடியே எங்கம்மா பாத்து நிச்சயம் பண்ணிட்டாங்க போதுமா?""பொய் சொல்றீங்க டாடி. நான் உங்க பழைய டைரில நீங்க எழுதி வச்ச சிலகவிதைகள பாத்தேன். அதனாலதான் அப்போ இருந்து கேட்டுட்டே இருக்கேன். நீங்க சொல்லவே மாட்டென்றீங்க""நான் காதலிச்சது உண்மைதான். ஆனா அது உன் அம்மாவ இல்ல" என்று அவர் விட்டத்தை வெறித்தபடி கூற அதிர்ச்சியில் வாய் பிளந்தாள்."என் அக்கா பொண்ண எனக்குதான் சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளர்த்தாங்க. நான் படிப்பு முடிச்சிட்டு வேலை தேடிட்டு இருந்த சமயம். கவர்மெண்ட் வேலைல இருக்கற மாப்பிள்ளை வந்துச்சுன்னு எங்க மாமா அவருக்கு பேசி முடிச்சிட்டார்" என்று அவர் எவ்வித உணர்ச்சியுமின்றி கூற ஆச்சர்யத்தில் விழிகள் இரித்து இமைக்காமல் தந்தையையே பார்த்தாள். சில நொடிகள் கழித்து"நீங்க போய் எதும் கேக்கலையா?" என்றாள்."அப்போ எனக்கு வேலை இல்ல. எந்த முகத்த வச்சுக்கிட்டு மாமாகிட்ட போய் கேப்பேன்? அப்போ எனக்கு உலகமே வெறுத்து போச்சு. பேசாம அவளகூட்டிட்டு போய்டலாமானு கூட நினைச்சேன். ஆனா அவ என்ன நினைக்கறான்னு எனக்கு தெரியவே இல்ல. கேட்டு அவ முடியாதுனு சொல்லிட்டா அது இன்னும் எனக்கு நரகம். அதான் கேக்காமலே விட்டுட்டேன். கல்யாணத்துக்கு போய் தாய் மாமா செய்ய வேண்டிய சடங்கு செஞ்சுட்டு வந்துட்டேன். அவளுக்கு சடங்கு செய்யும்போது நெத்தில சந்தனம் வச்சப்ப அவ கண்ணு கலங்குச்சு. இன்னைக்கு வரைக்கும் ஏன்னு தெரியல" என்றவரது கண்கள் கலங்க அதற்கு மேல்பேச முடியாமல் முகத்தை வேறுபுறம் திருப்பினார்.அவர் கண்கள் கலங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாமல்"பணத்துக்காக உங்களை விட்டு போனவங்களுக்காக நீங்க ஏன் டாடிகவலைப்படணும்? கம் ஆன். சியர் அப்" என்றவள் அவளது அன்றைய காலேஜ் கதைகள் பேசி அவரது கவனத்தை திருப்ப முயன்றாள். அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியதும் தூங்கச் சென்றாள்.ஆனால் சந்திரசேகரின் மனம் பழைய நினைவுகளையே அசை போட்டுகொண்டிருந்தது. அக்கா பெண்ணின் திருமணத்திற்கு பிறகு வேலை கிடைத்ததும், அவரது தாயார் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததும், மனைவியுடன் டெல்லி வந்து செட்டில் ஆனதும், தாயாரின் மரணத்திற்கு மட்டுமே சொந்த ஊருக்கு சென்று வந்ததையும், பின்பு சுசி பிறந்து அவள் இரண்டு வயது குழந்தையாய் இருக்கும்போது மனைவியையும் விபத்தில் பறி கொடுத்ததும், மகளையே தனது உலகமாக்கி கொண்டதையும் எண்ணியபடியே தூங்கி போனார்.சுசியோ இரவு முழுதும் அப்பா சொன்னதையே திரும்ப திரும்ப நினைத்துகொண்டிருந்தாள். அப்பாவுக்குள்ள இப்படி ஒரு சோகமா? என்றெண்ணிவருந்தியவளது மனது தானாய் அந்த பெண்ணின் மீது வெறுப்பை உமிழஆரம்பித்தது. ச்சே! கேவலம் வேலை இல்லாததை காரணம் காட்டி அப்பாவின் காதலை குழி தோண்டி புதைத்த பெண்ணை என்னவென்று சொல்வது?எப்படியாவது அவங்களை பாக்கணும். பாத்து இன்னைக்கு பாருங்க எங்க அப்பா எவ்ளோ ஒரு நல்ல நிலைமைல இருக்காருன்னு சொல்லணும் என்று எண்ணிக் கொண்டாள்.அவளது வேண்டுகோள் கடவுளின் காதுகளை எட்டியதோ என்னவோ அடுத்த நாள் அவளது அத்தைப் பெண் திருமண அழைப்பிதழ் வந்தது. அண்ணாவும் மருமகளும் இம்முறையாவது கண்டிப்பாக வர வேண்டும் என்ற ஒரு பெரிய வேண்டுகோளுடன் வந்திருந்த அழைப்பிதழை எடுத்துக் கொண்டு சந்திரசேகரிடம் ஓடினாள்."டாடி நான் ஒண்ணு கேப்பேன். கண்டிப்ப செய்யணும். மாட்டேனு சொல்ல கூடாது" என்று கைகளை பின்னால் கட்டியபடி கெஞ்சலாய் கேட்கும் மகளை பார்த்து புன்னகைத்த சந்திரசேகர் என்ன என்பது போல தலையசைத்தார்."ப்ராமிஸ் சொல்லுங்க. ப்ளீஸ் டாடி" அவள் கெஞ்சவும் சிரித்தபடி ப்ராமிஸ் என்றார். அவரிடம் அழைப்பிதழை நீட்டியவள்"இந்த கல்யாணத்துக்கு நாம போறோம்" என்றாள். வேண்டாம் என்று அவர் மறுக்கவும் பிடிவாதம் பிடித்து, மிகவும் கெஞ்சி எப்படியோ சம்மதிக்க வைத்தாள்.கல்யாணத்திற்கு போக எல்லா ஏற்பாடுகளையும் செய்தவள் அந்த நாளுக்காய் ஆவலாய் காத்திருந்தாள். அந்த பெண்ணை பார்த்து அவர் முன் பாருங்க நாங்கள் எப்படி நல்ல நிலமையில் இருக்கிறோமென்று காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அதற்காகதானே இத்தனை அடம் பிடித்து சம்மதம் வாங்கினாள்.அங்கு சென்றதும் அவளது சின்ன அத்தை பெண் இவளுடன் நன்றாக ஒட்டிக் கொள்ள திருமணத்தன்று அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். அவளிடம் கேட்டு அப்பாவின் அந்த அக்கா பெண் யாரென்று தெரிந்து கொண்டாள். அவர் யாருடனோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் முன்பு வேண்டுமென்றே அதற்கும் இதற்குமாய் நடந்தாள். அப்போது அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த இவளது அத்தை இவளை கூப்பிட்டு அறிமுகப்படுத்த சுசியின் இதயம் வேகமாய் துடித்தது. இந்த தருணத்திற்காகதானே இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்ததே. மனப்பாடம் செய்து வைத்த டயலாக்குகளை எல்லாம் வேக வேகமாய் மனதுக்குள் ஓட்டி பார்த்துக் கொண்டாள்.அவரோ சுசியை அருகில் அமர வைத்துக் கொண்டு கைகளை விடாமல் அவள் முகத்தையே இரு நொடிகள் பார்த்தார். அப்போது அவர் முகத்தில் சொல்ல முடியாத ஆர்வம் தென்பட சுசி புரியாமல் குழம்பினாள்."எப்படிம்மா இருக்க? என்ன படிக்கிற?" என்று அவர் கேட்கும்போது குரல் பிசிறியது அவளுக்கு தெளிவாக தெரிந்தது."நல்லா இருக்கேன் ஆன்டி. பி.இ ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கேன்" என்று அவள் சொன்னதும்"ஆன்டியெல்லாம் சொல்லாத. அம்மானு சொல்லு" என்று அவர் சொல்லும்போது கீழுதடு துடித்தது. பற்களால் கடித்து அடக்கியவர் எங்கோ பார்த்தபடி"அப்பா எப்படி இருக்கார்?" என்றார்."அவருக்கென்ன? ராஜா மாதிரி இருக்கார்" என்று அவள் முடிப்பதற்குள் அவளது அத்தை பெண் அப்பா கூப்பிடுவதாய் சொல்லி அவளை கூப்பிட "இருங்க வரேன்" என்று எழுந்தாள். சரியென்று அவர் அவளை நிமிர்ந்து பார்த்தபோது அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள்.அவர் விழிகளில் நிரம்பியிருந்த கண்ணீர்..... அன்று தந்தையின் கண்களில் கண்ட அதே கண்ணீர்......

tamil - maveeran

மாற்றான் குண்டுகள் - உன் மர்பைத் துளைத்தனவோ!
மாமனிதன் உன்னை மண்ணில் சாய்த்தனவோ!
சிதறிய தேங்காய் போல் சில்லாகிப் போனாயோ!
அன்றி நரிகள் கையில் சிக்காது நஞ்சை நீ மென்றாயோ!
சூரியக் கதிர் சமர்தனிலே சூரியன் நீ அணைந்தாயே!
ஈன்றெடுத்த மண்தனிலே இரத்த விதை விதைத்தாயே!
மாவீரர் சமாதியிலே மறவனாய் மலர்ந்தாயே வெளிநாட்டுத் தமிழருக்கும் வெகுட்சி வரச் செய்தாயே!
வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே வேங்கையாய் பாய்ந்தவனே வேட்டை ஆட வந்தவரை வெட்டிப் புதைத்தவனே ஊர் உறவு வாழ்வதற்காய்

உறங்காமல் உழைத்தவனே!
உறங்காமல் உழைத்ததினால் - இன்று உறக்கத்தில் போனாயோ!
தானைத் தலைவன் ஆணைப்படி அணி வகுத்த புலிகளைப் பார் படையெடுத்த பகைவர் கொடி பாதியிலே எரிந்ததைப் பார் முப்படை மூடரெல்லாம் முல்லையிலே முறிந்ததைப் பார் கூவி வந்த கூட்ட மின்று குரலிழந்து போனதைப் பார் மண்ணோடு நீ கலந்து மலராகிச் சிரிக்கின்றாய் விண்ணோக்கி நான் பார்த்தால் விண் மீனாய் ஒளிர்கின்றாய் வாள் ஏந்தும் வீரருக்கு வேராக நிற்கின்றாய் விடிவு தேடும் மக்களுக்கு விடிவெள்ளி நீ தானே.

tamil - siru kathai - khalghal

அன்று ஒரு வேலை விசயமாக நான் சென்னை கிளம்பினேன், அதற்காக ரயில் ஏற சென்றேன் . கொல்கத்தா ரயில் சந்திப்பில் அன்று பலத்த கூட்டம் காணப்பட்டது , ஒவ்வொருவரும் தன் இரண்டு கைகளிலும் பெட்டிகளை பிடித்து கொண்டு வேகவேகமாக அந்த நெருக்கடியில் நடந்து சென்றார்கள் .சிலர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களுடன் பைப்பில் முட்டிமோதி கொண்டிருந்தார்கள் . அந்த நெருக்கடியில் ஒரு தமிழ் குரல் ஒலித்தது ." அம்மா யாராவது கொஞ்சம் தருமம் பன்னுகளேன் ,கால் இல்லாத நொண்டிம்மா"நான் அந்த சத்தம் கேட்ட பக்கம் திரும்பி பார்த்தேன் . பல பீடி விளம்பர தாள்கள் ஒட்டிஇருந்த சுவரில் சாயுந்துஇருந்தன். அவனுடைய இரண்டுஊன்று கோலையும் பான் எச்சில் படிந்த சுவரில் சாய்த்து வைத்துஇருந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் முட்டிவரை துண்டிக்கபட்டுஇருந்தது . அதில் வெள்ளை துணி சுற்றிருந்தன் ,அந்த துணியை விட்டு ரத்தம் சிறிது வெளியே கசிந்துஇருந்தது . அதை பார்த்த எனக்கு அவ்வளவாக பரிதாபம் ஏற்படவில்லை ,இது போன்று சென்னையில் நிறைய உண்டு ,ஆனால் அதை பற்றி அவர்களிடம் விசாரிப்பதில் எனக்கு ஒருவித ஆர்வம் உண்டு. நான் என்னை அவனிடம் காட்டி கொள்ளவில்லை , என் என்றால்அவன் தமிழன் என்னிடம் உதவி கேட்டால் ? நானே நாய்போல் ஊரூராக சுற்றி சம்பாதிக்க வேண்டும் இதில் நான் எங்கு அவனுக்கு உதவி செய்வது .இதல்லாம் நடக்குரகாரியமா ? இருந்தாலும் அவனை அந்த இடத்தில் விட்டுவர எனக்கு மனமில்லை .அவனிடம் பேச்சு கொடுக்கலாம் என்று வாயை திறந்தேன் ,அப்போது ஹிந்தியில் கண்ணியமான பெண்க்குரல் கேட்டது ரயில் இரண்டு மணிநேரம் தாமதமாம், உடனே ரூமுக்கு போய்விடலாம் என்று யோசித்தேன் ,பிறகு மெல்ல அவனருகே சென்றேன் அவன் என்னை உற்று கவனித்தான் .உன் பேரு என்னவேன்று மட்டும்தான் கேட்டேன் , அதற்கு அவன் ,"அய்யா என்பேரு காசிலிங்கம், எதாவது உதவி பன்னுகய்யா ,இத்தனை நாளாய் இங்க ஒரு தமிழ் ஆளுக்குட வரலைய்யா ,நீங்களாவது எனக்கு எங்க ஊருக்கு போக டிக்கெட் வாங்கிதாங்கய்யா " அவன் பேசிக்கொண்டே இருந்தான் ஆனால் எ பார்வையும் மனதும் அவன் காலை சுற்றி இருக்கும் ஈக்களை போலவே அவன் காலை சுற்றி வந்தன.அவன் எனமுகதின்முன் கை அசைத்துகாட்டி அவன் பக்கம் என் கவனத்தை திருப்பினான் ."உங்களுக்கு எப்டி இந்த்கால் போச்சு " என்று கேட்டேன் .எவ்வளவுதான் கடுபடுதினாலும் என் கண்கள் அவன் கால்களையே நோக்கின ."அய்யா நான் மட்டும் இங்க வரலைய்யா என்னோட என் தம்பியும் வந்தான்"எதற்க்காக இங்க வந்திங்க என்று நான் கேட்பதற்குள் ,"நான் பொறந்ததே வெனய்யா வென ,எல்லாரும் வெளிநாட்டுக்கு பொய் சம்பாதிகுராங்கனு நானும் என் தம்பியும் ஒரு ஏஜென்சி முலமா பணத்த கட்டுனோம் ,அவனும் எங்கள சென்னைக்கு கூட்டிவந்தான் .ஒரு ரயிலுல ஏத்திவிட்டு இதுல போய் கொல்கட்டால ஏறங்குக எங்களுங்க உங்கள சிங்கப்பூருக்கு அனுப்புங்கனு சொன்னான் .அத நம்பி ரயில்ல ஏறுனோம் .இங்க வந்து இறங்கினா ஒருத்தனையும் காணோம் ,அப்படியே பெட்டிபடுக்கயோட வெளியே வந்து நானும் என் தம்பியும் ஒரு ஆட்டோ புடிச்சோம் ,சென்னைல அந்தாளு கொடுத்த விலாசத்த வச்சு அந்த எடத்துக்கு போன அது பொய் விலாசம். வந்த ஆட்டோல திரும்பி ரயிலுக்கு போய்டலாம்னு போனா எங்க பின்னாடியே எமன் பல்ல காட்டிகிட்டு வந்துருக்கான் சாமி ,ஆட்டோ பஸ்ல மோதி என் தம்பி அந்த எடதுலையே இறந்துட்டான்யா ,அப்புறம் பர்தா ஒரு நாத்தம் புடிச்ச ஆசுபுதிரில கால் இல்லாம நான் கிடந்தேன் .என் தம்பி எங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க சொன்னதும் மொழி தெரியாம புரியலையா ,அப்பதான் என் தலையுல உரைச்சது ,சொந்த ஊர்ல ராஜா மாறி வாழ்றதாவுட்டு காசுக்கு ஆசைப்பட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ,அன்னைகிருந்து ஊருக்கு போக காசுஇல்லாம ஒரு வராம பிச்சை எடுத்து காசு சேத்துக்கிட்டு இருக்கன். நீங்கதான் எதாவது உதவி செய்யணும் அய்யா ,எங்க ஊர்ல நாங்க சிங்கபூர்ல இருக்காத நெனச்சிக்கிட்டு இருபாங்க , வாங்க முன்னாடி இப்டி கால் இல்லாம போய் நிக்க வெக்கமா இருக்கு ,ஆனா போகாம இருந்தா இங்க அனாத பொணமா கிடப்பன் சாமி .உங்கள பார்தப்ரம் தன் இப்ப நம்பிக்கைய இருக்கன் ,டிக்கெட் எடுத்துகுடுபிங்கலய்யா"அப்போது மீண்டும் கண்ணியமான பெண் குரல் கேட்டது சென்னை ரயில் இன்னும் சற்று நேரத்தில் புறபடபோவதாக, அதை கேட்டதும் என் மனச்சாட்சி என்னும் அறைலிருந்து சட்டென்று வெளியே குதித்தேன் .என் அப்பா ஆசுபுதிரியில் இருபது ஞாபகம் வந்தது ,அவன் தன் பொருள்களை மூட்டைகட்டும்போது அவனுக்கு தெரியாமல் ரயிலில் ஏறிவிட்டேன் .

tamil - manathodu malai kalam

ஒரு அழகான நாளின் ........
இள மாலை வேளையிலே .......
நீர்த் துளிகள் சிலபுவியை நோக்கிச் சிதறின........
ஒரு வானவில்...............
ஒரு கோப்பை தேநீர்..........
அளவற்ற மகிழ்ச்சி...........
அளவோடு புன்னகை..........
சட்டென்று நொடிப்பொழுதில் உலகம் அழகானது..........
சொற்கள் பற்றவில்லை..........
கற்பனைகள் போதவில்லை...........
வர்ணனைகள் மிச்சமில்லை........
கனவுகளும் மீதமில்லை.......
இரசனைகளால் இப்புவியின் எழிலை அளந்த பொழுது...........

என் உலகில்,இதயம் தன்இரசனை சிறகுகளைகட்டும் போதெல்லாம்.........
கொஞ்சம் தேநீர்........ நிறைய வானம்........