tamil - kanavil vanthan koovindsami

என்கனவில் வந்த கோயிஞ்சாமி கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்)............

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்...........................

No comments: